கோழியவரை இலை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆழிசுற்றும் வையத் தடர்ந்தபே ராமையொரு
நாழியினிற் கெட்டு நலியுங்காண் - கோழிகேள்
கோழியவ ரைத்தழைக்குக் குன்மங் குடல்வாதம்
ஊழிவரைக் கும்வாரா(து) ஓது
- பதார்த்த குண சிந்தாமணி
இந்த இலை வயிற்றிலுள்ள ஆமக்கட்டி, வயிற்று நோய், ஆந்திர பித்தவாதம் இவற்றைப் போக்கும்