கொடும்பல்லி

"அப்பா... அப்பா...., dinosaur க்கு தமிழ்ல என்னப்பா சொல்லுவாங்க?"
மகள் சிந்தியா.
"ஹம்ம்... கொடும் பல்லினு எங்கயோ படிச்சதா நனைக்கிறேன்...." நிவேதன்.
"இங்க , 'Google'ல டைனசோர் னு தான் போட்டிருக்கு"என்று சொல்லி மீண்டும் தன் அறைக்குள் ஓடி மறைந்தாள் 7 வயது மகள்.
கண்டிப்பாக மீண்டும் வருவாள் என புன்னகைத்து விட்டு, மேசையின் மீதுள்ள மின் விசிரியயைத் துடைக்கத் தொடங்கினார் நிவேதன்.

தமிழ் சொற்களுக்கு அகராதியாகத் தனியாக அதிகாரப்பூர்வ அகப்பக்கம் இல்லாமல் இருப்பது எல்லோருக்கும் சிரமம். குறிப்பாகப் புதியச் சொற்கள். அவப்போது சில கவிஞர்களும், இணையத்தில் சில தமிழ் ஆய்வாளர்களும் ஆசிரியர் போல் சில சொற்களைத் தமிழாக்கி அறிமுகம் செய்வர். கவிஞர் மதன் கார்க்கி , 'ஐ' திரைப்பாடல்களில் பல புதிய தமிழ் சொற்களைச் சேர்த்ததை , நிவேதனின் மனைவி தன்னிடம் சொல்லு மகிழ்ந்தது தனக்கு நினைவுக்கு வந்தது.

சிறப்பு பெயர்சொற்களுக்குத் தமிழாக்கம் செய்யும் ஆர்வம் கொண்ட நமக்கு, இன்னும் ஆங்கிலத்திலேயே இருக்கும் பல தமிழ் பொதுப்பெயர்களைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் நிவேதனுக்குப் பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ரொட்டி வெதுப்பி ஆனாலும், காப்பி குளம்பி ஆனாலும், இவற்றை பயன்படுத்த நமக்கு இன்றும் தயக்கம். ஆனால், முகநூல் எனப்படும் 'Facebook' மற்றும் புலனம் எனப்படும் 'WhatsApp ". இவற்றை தமிழில் அழைப்பதை வழக்கமாக மாற்றுகின்றோம். இவ்வாறு செய்வது தவறு எனவும், திரு. மணி என்பவரை Mr. Bell என்று அழைப்பது போல் உள்ளது என்று தனக்குத் தெரிந்த தமிழ் மொழி இலக்கண விவாதத்தை பல முறை பகிர்ந்துள்ளார் நிவேதன். ஆனால், விரைவில் 'Tiktok' கிற்கும் தமிழில் பெயர் வந்துவிடும்.

வியாபார நிமித்தம் வைத்த விளம்பர முத்திரைப் பெயர்கள், இடம், அழைக்கும் பெயர் எப்படி தமிழாக்கி தமிழை வாழவைக்கின்றனர் என்று நிவேதனுக்கு குழப்பம். சுனாமி என்பதைப் பேரலை என்று நாம் அழைத்தாலும் , அதன் அசல் பெயரான த்சுனாமி எனும் ஜப்பானிய மொழியையே இன்னும் 'Tsunami" என்றுதான் ஆங்கிலேயர்கள் அழைக்கின்றனர். ஆனால், தோசையை, டோசா என்று தமிழ் தெரியாதோர் கூறினால், அவர்களின் உச்சரிப்பை திருத்துகின்றோம். அது, அவர்களின் மொழியில் எழுதினாலும் விடுவதில்லை.

துடைத்த மின் விசிரி நல்ல காற்றை வழங்கத் தொடங்கி விட்டது.
"அப்பா... அப்பா...., அனக்கொண்டா க்கு தமிழ்ல என்னப்பா சொல்லுவாங்க?" மீண்டும் தன் அருகில் அமைந்துள்ளது மகள் சிந்தியா.
"அதுவும் பாம்புதானே? அனக்கொண்டா பாம்புனே சொல்லு" என நிவேதன் சமாளித்தான்.
ஏமஸன் ( Amazon ) காடுகளில் மட்டும் வாழும் அனக்கொண்டாவின் பெயர், யானைக்கொன்றான் எனும் தமிழ்சொல்லால் உருவானது என்பது இவர்களுக்குத் தெரியாது. அனக்கொண்டாவிற்கோ யானை எப்படி இருக்கும் எனத் தெரியாது. ஏமஸனில் ( Amazon ) யானை இருந்ததில்லை. தெற்கு அமேரிக்காவிலிருந்து, இந்தியா தேசம் பிரிந்து வந்து , ஆசிய கண்டத்தில் ஒட்டியதாக விஞ்ஞானிளும், புவியியலாளர்களும் கூறுகின்றனர்.

மொழி அழிந்தால் இனமும் அழியும் என்கிறது மலாய் பழமொழி ஒன்று.
கொடும் பல்லிகளைப்போல் முற்றழிவை நோக்கி பல உலக மொழிகள்.

#siven19

எழுதியவர் : Siven19 (15-Aug-21, 9:43 pm)
சேர்த்தது : siven19
பார்வை : 75

மேலே