சிறுவள்ளிக் கிழங்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மந்தமிகுந் தீபனம்போம் மாறாக் கரப்பானுஞ்
சிந்த மிகுகபமுஞ் சேருங்காண் - தொந்தமாய்
மூல முளைவளரும் முட்டைச் சிறுகிழங்கால்
ஏல வளகமின்னே யென்

- பதார்த்த குண சிந்தாமணி

இக்கிழங்கு மந்தம், கரப்பான், சிலேட்டும விருத்தி, கபம், முளை மூலம் ஆகியவற்றை உண்டாக்கும்; பசியெடுக்காது

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Aug-21, 9:01 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே