சகோதர பாசத்தை கூறுபோடும் பெண்கள்
சகோதர பாசத்தை கூறுபோடும் பெண்கள்
இயற்கை எழில் கொஞ்சும் பழமை மாற பசுமையான கிராமம் அங்கு பரம்பரை சொத்துக்களுக்கு குறைவில்லாமல் அனைத்து வசதிகளுடன் வாழும் விவசாய குடும்பத்தின் சகோதர பாசத்தின் வெளிப்பாடு இந்த சிறுகதை.
செழிப்பான இந்த குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண்பிள்ளை. அனைத்து பிள்ளைகளும் மிகுந்த சகோதர பாசத்தோடு பெற்றோர்கள் ஊட்டி வளர்த்தார்கள்.
பெற்றோர்கள் பிள்ளைகள் அனைவரையும் அனைத்து வசதிகளுடன் அவரவர்கள் விருப்பத்திற்கு படிக்கவைத்தார்கள்.
அடிக்கடி அனைத்து பிள்ளைகளுக்கு பாசம் என்றால் என்ன என்பதை எடுத்து சொல்லி வளர்த்தனர். பிள்ளைகள் அவர்கள் விருப்பம்போல் படித்துவிட்டு சிலர் வேலைக்கு சென்றனர் சிலர் குடும்ப விவசாயத்தை பார்த்துக்கொண்டனர் . பெண்பிள்ளை மூத்தவள் என்பதால் திருமணம் பேசி விரிவாக முடித்தனர். அதனை அடுத்து ஆண் பிள்ளைகளுக்கு ஒருவர் பின் ஒருவராக திருமணம் முடித்தனர்.
பெண் பிள்ளை திருமணத்திற்கு பிறகு தன் கணவன் வீட்டுக்கு சென்று விட்டது. ஆனால் பெற்றோர் ஆண் பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு சகோதர பாசம் குறையக் கூடாது என்ற எண்ணத்தில் கூட்டு குடும்பமாக வைத்திருந்தனர். ஆனாலும் பிள்ளைகளின் மனைவிகள் அவ்வப்போது சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்தினார் அதனை பிள்ளைகளின் பெற்றோர் முறியடித்தனர். பெற்றோர் இருக்கும் வரை இறக்க இருந்தனர். பெற்றோருக்கு வயது முதிர்ச்சி ஏற்பட்டது அவர்களும் ஒருவர் பின் ஒருவராக இறக்க நேரிட்டது.
பெற்றோர்களுக்கு பிறகு மனைவி மார்களில் இரு சகோதரர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது நாளடைவில் அதிகமானது. தொடர்ந்து மனைவிமார்கள் தொல்லை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் பிரிவினை எண்ணம் அதிகமானது அதன் வழி ஒரே வீட்டில் இறந்ததாக பிரிக்கப்பட்டு தனி தனியாக வாழத் தொடங்கினர்.
நாளடைவில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. இவர்களை தொடர்ந்து பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை
இரு சகோதரர்களின் மனைவிமார்களும் தொடர்ந்து பிரிவினை பிரச்னையை ஏற்படுத்தி கொண்டு இருந்தனர் . இப்படி ஆரம்பித்த பிரிவினை இன்றும் தொடர்கிறது.
வீட்டிற்கு வந்த புதிய பெண்களின் சுயநலத்தால் அவர்களின் பிடிவாதத்தால் இணைபிரியா சகோதர பாசம் பிரிக்கப்பட்டு இன்று வரை அந்த பாசமே இல்லாமல் போனது அவர்கள் அனைத்து தலைமுறைகளில். இந்த சிறுகதையின் மூலம் எனது வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து புதிதாக வீட்டிற்கு திருமணம் அகி வரும் பெண்கள் தங்களது குடும்ப சகோதர பாசம் போல் நினைத்து புகுந்த வீட்டில் நடந்து கொண்டு குடும்ப சகோதர பாசத்தை ஊட்டி வாழ வையுங்கள் இது உங்கள் தலைமுறையோடு முடிவதில்லை அடுத்தடுத்து தலைமுறைக்கானது என்பதை மனதில் வையுங்கள்.