இறைவழிதான் வாழ்வில் நல்வழி

சம்சார சமுத்திரத்தில் மிதந்து தவிக்கும்
மானுடரே இதிலிருந்து நீந்தி அக்கரை
சேர்ந்திட ஒரே வழி இறைவழியொன்றே
இதை விட்டு ஆசைகளாம் அலைகளில் மாட்டி
அவதிப்பட்டு அழிந்து மீண்டும் பிறவி
எடுத்து இம்மண்ணில் மீண்டும் உழல்வது
தவித்திட இறைநாமம் நாவில் ஏற்றி
அல்லும் பகலும் நீயே துணை இறைவா
என்று பாடிடு ஆடிடு களித்திரு அந்த
பேரானந்தத்தில் அதுவே ஞானிகள் காட்டும் வழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Sep-21, 5:35 pm)
பார்வை : 93

மேலே