ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

அறிவு வெளிச்சம் பாய்ச்சும் ஞாயிறுகள்!!

வறண்ட மனங்களில் ஞான நீர் பாய்ச்சும் ஞான அருவிகள்!!

விண்ணிற்கு விளக்கம் சொன்ன மெழுகுவர்த்திகள்!

மண்ணிற்கு மகத்துவம் கொடுக்கும் மகான்கள்!!

காற்றைப் போல்
தீராமல் வீசிக் கொண்டிருப்பது இவர்கள் வேலை!!

ஊற்றை போல் ஊறிக்கொண்டே இருக்கும் உபாச பணி!!

ஏறி செல்ல எப்போதும்
ஏணி போல இவர்கள்!!

பெற்றோர் போல இவர்கள்
பேணுவர் மாணவர்களை!!

உற்றாரும் உறவும் மதிக்கும் வண்ணம் மாற்றும் மந்திரவாதிகள் இவர்கள்!!

நீ உயர்ந்தால் பொறாமை கொள்ளாது பெருமை கொள்ளும் பெருந்தன்மை கொண்டவர்கள்!!

கத்தி கத்தியே
தொண்டைத் தண்ணி வற்றினாலும்
காரிருள் போக்கும்
கல்வி சூரியன்கள்!!

மானசீகமாக உடன் வந்து
நல்வழி காட்டும் துருவ நட்சத்திரங்கள்!!

பச்சை மண்ணை பிசைந்து எடுத்து
பல வடிவம் கொடுக்கும் குழவர்கள்!!

பாறாங்கற்களை பட்டை தீட்டி
பாரினில் ஜொலிக்க செய்பவர்கள்!!

நாராய் கிடப்பவரை
மணக்கும் பூநாராய் மாற்றுபவர்கள்!!

மண்ணாய் கிடப்ப வரையும்
திரு மண்ணாய் மாற்றுபவர்கள்!!

உதவாத மூங்கிலையும்
புல்லாங்குழலாக்கும் புனிதர்கள்!

அழியா செல்வத்தை
அளவில்லாமல் அள்ளிக் கொடுக்கும்
வள்ளல்கள்!!

கண்கண்ட தெய்வங்கள்
நமக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்!!

அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தும்

மு குமார் தாவரவியல் ஆசிரியர்.
05/09/2021

எழுதியவர் : மு குமார் (5-Sep-21, 9:16 pm)
சேர்த்தது : மு குமார்
பார்வை : 977

மேலே