பிஞ்சியில் துவர்க்கும்

பிஞ்சியில் துவர்க்கும் காயில் புளிக்கும்
கனிந்தாலும் புளிக்கும் புளியெனப் பெயராம்

பிஞ்சியில் துவர்க்கும் காயில் புளிக்கும்
கனிந்தால் இனிக்கும் மாவெனப் பெயராம்

பிஞ்சியில் துவர்க்கும் காயில் இனிக்கும்
முதிர்ந்தாலும் இனிக்கும் தேங்கவெனப் பெயராம்

பிஞ்சியில் காரும் காயில் காரும்
கனிந்தாலும் காரும் மிளகாவெனப் பெயராம்

பிஞ்சியில் பாலாய் காயில் மாவாய்
முற்றினால் அரிசியாய் நெல்லெனப் பெயராம்

பிஞ்சியில் இனிப்பாய் காயில் வேறுநிலையாய்
முற்றினால் பஞ்சியாய் பருத்தியென பெயராம்

பலநிலை உடைய பயிர்நிலை நிறையவே உலகில்
இப்பலநிலை ஒன்றிய ஒரு பிறவி மனிதனே உணர்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (6-Sep-21, 8:54 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 57

மேலே