பசி வந்தால் பறக்கும் பத்துக்கள்
நேரிசை ஆசிரியப்பா
கல்வியும் அதனால் கிடைத்திடும் அறிவுமே
குலத்தின் மூலமாய் கிடைக்கும் மானமும்
பொறுமை மூலமும் கிடைக்கும் முயற்சியும்
தவமும் அதன்கண் செய்யும் தானமும்
கடும்பழி கொடுக்கும் காமம் மற்றும்
ஊக்கம் எனப்படும் தாளாண்மை
என்பன பசியது வந்திடின் பறக்குமே.
------ நன்னாடன்.