பித்ததேகிகட்குக் கறி - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)
வெள்ளரி இரண்டு பாகல் விரிபுடல் பீர்க்கு சிம்பை
முள்ளிபூ சனிகத் தரியும் முருங்கைமா களவ ரம்பை
எள்ளிலிக் காய்கள் வள்ளி ஈருளி கதலிப் பூதண்
டள்ளியுண் ஆணஞ் செய்வர் அரும்பித்த தேகர்க் கென்றே
- பதார்த்த குண சிந்தாமணி
வெள்ளரி, கொம்புப்பாகல், மிதிபாகல், நீளப்புடல், பீர்க்கு, அவரை, ஆற்றுமுள்ளி, கல்யாண பூசனி, கத்தரி, முருங்கை, பருங்களா, வாழைக்காய், வள்ளிக்கிழங்கு, வெங்காயம், வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை பித்த உடலினர் சாப்பிடலாம்.