இல்லை
நிச்சயம்
ஏதோ ஒன்று
இருக்கிறது,
ஒன்றுமில்லை
என்பதில்....
இல்லை...
இருக்கிறது...
இதில் இல்லை
பிரச்சினை....
இருக்கலாம்
என்பதில்தான்
நிறைய
பிரச்சினைகள்....
ஏக்கம்
இருக்கிறது,
இருந்ததை நினைத்து...
இதை
மறுப்பதற்கில்லை...
இல்லை என்பது,
இருந்தபோது
ஏற்பட்ட கற்பனை
என்றாலும்,
இருந்தது என்பது
இல்லாதபோது
ஏற்படும் நிதர்சனம்.
✍️கவிதைக்காரன்.
(நிதானமா படிங்க... இல்லை எனில் புரியவே புரியாது)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஜெயில் உணவு...
தருமராசு த பெ முனுசாமி
01-Apr-2025

காற்றிற்கு ஒரு...
கே என் ராம்
01-Apr-2025
