பிரசவம்
அத்தனை
எளிதல்ல,
முற்றிய கருவை
பிரசவிப்பது...
சில
நேரங்களில்
தூக்கம் என்பது
கண்களுக்கு
தூக்கமாகிவிடும்...
புரண்டால்
மாறிவிடுமென,
கத்தி மேல்
படுத்திருப்பதைப் போல
அசைவற்ற
இரவுகள்...
பிரசவத்திற்கு
பின்பான
பிரியமான
எதிர்கால தருணங்கள்
நிகழ்கால
நிதர்சனங்களாய்
மனதில்.
பிரசவம் முடிந்தால்
பரவசம் தானே...
அழித்து,
திருத்தி,
மீண்டும் செய்து,
பிரசவ வேதனைதான்
ஒவ்வொரு
கவிதை
எழுதி
முடிக்கும் போதும்.
ஒரு
கவிதையை
எழுதி
முடித்து,
பரவசிப்பதற்குள்,
சிசுவை பிரசவித்த
வலிகள்...
.
✍️கவிதைக்காரன்
(கவிதையை எழுதி முடிப்பதன் சிரமம், என பெயரிட்டிருக்கலாம்.)