தேவை ஒரு பிரிவு
தேவை ஒரு பிரிவு...
*********************
காதலில்
பிரிவு என்பது
மிக அவசியம்....
இல்லையெனில்,
காதலின் ருசி
தெரியாமலேயே
போய்விடும்....
காதல்
மிக மிக அழகானது...
அவ்வளவு அழகு
என்னிடம் இல்லை...
அதனால் தானோ
என்னவோ,
நீ
காதலை நேசிக்கிறாய்...
என்னைப்
பிரிந்து போகிறாய்...
ஒருவேளை,
பிரிவுக்குப் பின் வரும்
பரவசத்திற்காக
பிரிந்து போகிறாயோ....
எப்படியாகிலும்
இப்போது உனக்கு
தேவை
ஒரு பிரிவு......
✍️கவிதைக்காரன்.