மாறுதல்கள்

காலத்தின் மாறுதல்
ஞாலத்தில் தெரிகிறது
தலைமுறையி​ல் மாறுதல்
நடைமுறையில் தெரிகிறது
கவிதைக​ளில் ​மாறுதல்
வரிகளில் தெரிகிறது
உடல்நிலையில் மாறுதல்
தோற்றத்தில் தெரிகிறது
உள்ளத்தி​ல் மாறுதல்
உருவத்தில் தெரிகிறது
கருத்துக்களில் மாறுதல்
மோதல்களில் தெரிகிறது
இயற்கையின் மாறுதல்
​காட்சிக​ளில் தெரிகிறது ​
​நாகரிகத்தின் மாறுதல்
நடை உடையில் தெரிகிறது
எதிர்காலத்தின் மாறுதல்
நிகழ்காலத்தில் தெரிகிறது !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (15-Sep-21, 7:49 am)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : maruthalkal
பார்வை : 93

மேலே