கடல் கன்னி
உங்களுக்கொரு
சவால்..
மூன்று தடவைகளுக்கு மேல்,
படிக்காமல்
புரிந்து கொள்ள
முடியுமா
இக்கவிதையை...?
""""""”""""""""'''''
நீண்ட நாட்களுக்கு
முன்பு,
எனக்கு
ஆழ்ந்த சாவு,
தற்காலிகமாய்...
உறக்கம்,
மரண ஒத்திகை தானே....?
ஆழ்ந்த தூக்கத்தில்
கனவுகள் வராது...
ஆனால்
எனக்கு வந்தது
ஒரு கனவு...
கனவில் வந்தவள்
ஒரு
கனவு கன்னி..
காதல் கன்னி...
அவள் ஒரு
கடல் கன்னி...
கடல் கன்னியை
யாருமே
பார்த்ததில்லை...
நான் கூட
கனவில் மட்டும்.,.
கடல் கன்னி
சொன்னாள்....
"மனிதர்கள்
உண்மையாக காதலிக்கும் வரை
அல்லது
உண்மையாக காதலிக்காத வரை,
என்னை யாரும்
பார்க்கவே முடியாது..."
திக்கென்று
விழித்துக் கொண்டேன்...
இன்றுவரை
யாருமே
கடல் கன்னியை
பார்க்கவே இல்லை...
அதன் பின்
கடல் கன்னியும்
கனவில்
வரவே இல்லை...
அது வெறும் கனவு தானே
என்று
ஒதுக்கி விடவும்
முடியவே இல்லை....
✍️கவிதைக்காரன்