முயற்சி அது உன் மூச்சி

முயற்சி அது உன்
மூச்சி
முயற்சி அது புரட்சி
முயலாதவனுக்கு அது
தளர்ச்சி
பேச்சில் இல்லை முயற்சி
முயற்சி
பிடிவாத குணத்தில் இல்லை முயற்சி
பிடிங்கி எடுப்பதில் இல்லை படித்து வருவது இல்லை முயற்சி
பிடித்து செயல் படுவதே முயற்சி



முயற்சியும் முயல்தான்
முயன்று ஓடவேண்டும்
முந்தி ஓடவிரும்பவேண்டும்
முடிவைத்தேடி ஓடவேண்டும்
முடியாது என்று இருந்தால்
முயற்சி தோற்றுவிடும்

முயற்சிக்குத் தேவை முதிர்ச்சி
முயற்சிக்குத் தேவை விடா முயற்சி
முயற்சிக்குத் தேவை பயிற்சி
முறை இல்லாத முயற்சி
தளர்ச்சிதான்
முன்னுக்கு கொண்டுவரும் இந்த முயற்சி
முடியவில்லை என்றால்
முடங்கிடும் முயற்சி

முடிவைத்தேடாதே
மூளையில் தேடு
முயன்று ஓடு
முடிவு விடிவு தான்
முடிந்தவரை முயன்றால்
வெற்றி தான்

விடுவு வேண்டும் என்றால்
விரும்பியே முயன்றிடு முழுமூச்சோடு

விடியும் என்று வீற்றிருக்காதே
விரும்பியேத் தேடு
விடைகான ஓடு
முயலாது இருக்காதே
முயளாமை இயலாமைதான்
முதுமையிலும் கொடுமைதான்


விடாதே
முயற்சியை விரட்டி ஓடு
விடா முயற்சி
தருவதோ
தொடர் வெற்றி


முயற்சிக்குத் தேவை
முக மலர்ச்சி

வெறும் வாய்ப்பேச்சில் இல்லை முயற்சி
கிளர்ச்சியில் இல்லை
முயற்சி
களைப்பில் இல்லை முயற்சி
கவலையில் கிடப்பதில்லை முயற்சி
கல்லை எடுக்கவும் முயற்சித்தேவை

கலையை வடிக்கவும்
முயற்சி தேவை
கல்லும் சிலையாகும்
கலையும் காவியமாகும்
முயற்சியால்

முயற்சி இகழ்சி இல்லை
இடிந்து கிடப்பதற்கு பதில்
இடித்து முழங்கவே முயற்சி


அடி எடுத்து வைக்கவே முயற்சி
இடித்து தடைகளை தகர்த்தவே முயற்சி

சொல்லி வருவதில்லை முயற்சி
செயலில் வருவதே முயற்சி
செய்து காட்டுவதுதான் முயற்சி
செத்து ஒழிய வேண்டியதில்லை
முயற்சிக்காக


முயற்சிக்கு தேவை
முழு நம்பிக்கை
விடாத முயற்சி
விளையும் தொடர் வெற்றிதான்


தடுக்கிவிடாது முயற்சி
தானாய் வராத முயற்சி
தள்ளிப்போனால் வராது இந்த முயற்சி


பாடுபடுபவன் தான்
படைப்புக்கு தயாராகிறான்
பாதியில் நிற்பவன்
பாதை மாறுகின்றான்


விலைகொடுத்து வாங்க முடியாதது முயற்சி
விற்பனை ஆகாதது முயற்சி
விதியையும் மாற்றுவது முயற்சி

மண்ணில் விழுவது அவமானம் இல்லை
மறுபடியும் விழுவது தான் அவமானம்.

மறுபடி விழுபவன்
அவன் தான் ஊனம்


விழுந்தால் தான் விதை
முலைக்கும்
விழுதாய் விழுந்திடு
விதியை எதிர்த்து தொழுதிடு
விடியும் என்றே முழங்கி
முயன்றிடு
விருச்சமாய் எழுந்திடு


முயற்சி செய்
தடைகளும் தடுமாறும்
தள்ளிப்போகும்
தடுங்களும்
நடுங்கி ஓடும்


கைவிடாதே முயற்சியை
களங்கிவிடாதே

முயற்சி முயற்சிதான்
முந்தி முந்தி வரும்
வெற்றிதான்


ஏற்றமும் இறக்கமும் வரும் தான்
ஏற்றமம் வந்தால் ஏறி நட
இறக்கம் வந்தால் எத்தி நட


வம்பு வேண்டாம்
வீம்பு வேண்டாம்

வாய்ப்பைத்தேடு
நம்பிக்கையோடு ஓடு
முயற்சியோடு செயல்டு

சிறகடிக்கட்டும் கனவுகள்
மூடிக்கிடக்க வேண்டாம்
முயற்சி

உறுதி இறுதியில்லை
உடைந்து போகவும் தேவையில்லை


உறுதியுடன் உழைத்திடு
உன்னைத்தேடி வரும் வெற்றி


பலசாலியும் பலகீனம் ஆகலாம்
முயற்சியை விட்டால்

புத்திசாலியும் புதைந்துபோகலாம்
புதுப்பிக்க முயல வில்லை என்றால்

சிந்திக்கத் தோனும் முயற்சியே
சிறகடிக்கத்துடிக்கும்

கவிஞனின் புரட்சி
புதிய் முயற்சி
சிந்தித்தால் தான் சீறி வரும் கவி
முயன்று முயன்று பார்த்தால் தான் ஊறிவரும் புதிய உயிர் ஓட்டம்உள்ள கவிதை

படைப்பின் இரசியத்தைக்காண
படுத்து உறங்காதே
படைப்பைத்தேடு
பயிற்சி எடு
முயற்சியை கொடு
முட்டிமோது
முந்தித் தள்ளு
விடிவும் உனதுதான்
முடிவும் உனக்குத்தான்
முயன்றவறை ஓடு
முரண்டு பிடிக்காதே


அச்சத்தை விடு
வாய்ப்பை அள்ளி எடு
முயற்சியைக் கொடு
முழு மூச்சாய் செயல் படு
ஆற்றலைத் தொடு
தடையை தள்ளி விடு

துள்ளி எழு
தள்ளி விடு
தளராது ஓடு
ஒன்றுபடு

உழைத்து பாடுபடு
உழைத்தே ஓடு
உள்ளத்தில் இருப்பதை எடு
நேற்று என்பதை விடு
நாளை என்பதைத் தொடு

பயத்தைவிடு
பயணத்தை தொடரு
பணிந்து விடு
பணிவன்போடு செயல்படு
விலகி ஓடுவதை விடு
விரட்டி ஓடு
விழுந்தாலும் எழு
விரைந்து ஓடு
மாற்றத்தைத்தேடு
மறதியைத் தடு
வாழப் பழகிவிடு
நம்பி எடு
நம்பி (க்) கையை நீட்டு

வேற் ஒன்று தான்
ஊன்றும்
விறகு என்றும்
வளராது
விழுதாய் இருந்துவிடு
விலகிச் செல்வதை விடு
தொலைநோக்கியாய் இரு
தொல்லைகளில் இருந்து விடுபடுவதை பாரு

அதிஷ்டத்தை தேடுவதை விடு
அதிர்ச்சியை விடு
ஆசையோடு முயன்றிடு
அடி எடுத்து வைப்பதெல்லாம் வெற்றிதான்

மாற்றத்தைத்தேடு
மறந்தும் தளராதே
மரங்கள் துளிர்விடும்
வெட்டினாலும்
தளர்வது இல்லை
தளிர்த்து நிற்கும்
தனித்து தெரியும்
தயங்காது செயல்படு
தன்னலம் இல்லாது
செயல்படு

பாதையைத்தேடு
பயணத்தை எடு
பலகீனத்தை வீடு
பயத்தை விரட்டு
படைபோல் முயற்சியைத் திறட்டு
எல்லாம் வெற்றிதான்
எதிலும் வெற்றிதான்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (15-Sep-21, 10:49 pm)
பார்வை : 1484

மேலே