கரிசல் காடு

நான் பெத்த மவனே
நான் சொல்லப்போற
சங்கதிய கொஞ்சம்
சலிக்காம கேளுகண்ணு


கரிசல் பூமியிது இங்கு
தரிசு நிலமே பாதி கண்ணு


காடு காஞ்சுகிடக்கு
பருத்தி வெடிச்சுக்கிடக்கு
பருத்திக்கு விலை இல்லை
பறிப்பதற்கும் வேலை ஆளுமில்லை


வெந்துபோன நிலம்போல
நொந்துபோனான் உங்கப்பன்
உழுது கெட்ட நாங்க இப்போம்
அழுது கெட்டுப்போனும்
பழுது பட்ட உடலால்
பாதி நோயாளியா ஆனோம்


விளைவிக்கத் தெரிஞ்ச எங்களுக்கு
கடைவைக்கத் தெரியல
கால்கடுக்க நின்னோம் கமிசன்கடையில
காசு கைக்குவந்து சேரும்முன்னே
கடனாளியா ஆனோம்


பெத்தவ சொல்லுதேன் கேட்டுகோடா
மத்தத தூரவைச்சிக்கோட
படிப்பு ரெம்ப முக்கியண்டா
பருத்திகாடல்லாம் அப்புறண்டா


வேகமா நட கண்ணு
வெயில்வரும் முன்னே
வீடுதான் போயி சேரனும் கண்ணு

எழுதியவர் : சுந்தர் (24-Sep-21, 2:08 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 23

மேலே