உயிர்
"பாய்ந்து வரும் புலியின் வேகம்,
அதில் தெரியுது இரை கிடைக்கா
அதன் கோபம் ,
ஓடி ஒளியுது மான் ,
மறைவிடத்தின் ஒரு ஓரந்தான் ,
தேடி வருகுது புலி ,
மானுக்கோ அதைக் கண்டு கிலி,
ஓடி ஓடி தேடுது புலி ,
மறைய துடிக்குது மான் ,
முடிந்தால் உடனே
கரைந்து விடவும் தான் ,
சலித்து கால் வலித்து
தொய்ந்தது புலி ,
தப்பி பிழைத்தோம் என
மகிழ்ந்து பாய்ந்தது மான்,
துள்ளி குதித்து ஓடுது
அந்த மான் ,
உயிர் அனைத்துக்கும்
அற்புதம் என்று உணர்ந்துத்தான்."