வருக இறையே

"தொழுதிட்டேன் வரைமுறையின்றி,
அழுதிட்டேன், இனி தொழ
முறை ஏதுமின்றி ,

பார்! இறை நீர், கை விட்டால்
என் குறைதனை தீர்ப்பார் யார் ?
பறை அறைந்து உரைத்திட்டேனே ,
கரையெனை சேர்ப்பிர் என,

துன்ப சிறையில் விழுந்திட்டேன்,
நம்பிக்கையுடன் எழுந்திட்டேன், விலகிடும் இப்பனித் திரையென, பொறுத்திட்டேன்,

கரைந்ததுவே உம் நினைவில்
என் சித்தம் ,
புரையேறவில்லையா உமக்கு
நித்தம் ?

பிணி அது ஓட ,
கனி என மனதுனை நாட,

கறை படியா உன்னருளை காண, விரைவாக வந்து விடு எனை பேண. "

எழுதியவர் : (16-Sep-21, 7:58 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 315

மேலே