ஜாக்கிரதை
ஜாக்கிரதை.
துள்ளாத மனத்தையும்,
துள்ள வைக்கும் காதல்.
தூங்கியிருந்த ஆசைகளை,
தூண்டி விடும் காதல்.
விரும்பாத வாழ்வை,
விரும்ப வைக்கும் காதல்.
ஜாக்கிரதை !
"காதல் பொல்லாதது",
இரு விளிம்புக் கத்திபோல்,
இதயத்தை கீறி விடும்.
பலநாள் நண்பர்களையும்,
பகைக்க வைக்கும் காதல்.
தாய் தந்தையரை,
தள்ளி வைக்கும் காதல்.
அமைதி காத்தே,
அறிவைப் பாவித்தால்!
காதல் கொடி 🎌 பறக்கும்,
காதல் கனி 🍒 கிடைக்கும்.
ஆக்கம்,
சண்டியூர் பாலன்.