கவிதைகள்

உன்னைப் பற்றிய
கவிதைகள்
அழகுதான்,
ஆனால்
அவை
உன்னை விட
அழகாக இல்லை

என்றான்
ஒரு கவிஞன்.

யாரை நினைத்து
அப்படி
எழுதினானோ
எனக்கு தெரியாது.

நானும் தான்
என்னவளை பற்றி
சோக கவிதைகளை
எழுதினேன்...

விதிதான்,
வேறென்ன
சொல்ல....

இவளைப் பற்றிய
சோகக் கவிதைகள்
இவளை விடவும்
சோகமாக இல்லை.



✍️கவிதைக்காரன்

எழுதியவர் : (17-Sep-21, 3:36 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kavidaigal
பார்வை : 150

மேலே