எச்சரிக்கை உணர்வு
தேடித் தேடித் தொலைகிறேன்
எதுவும் கிடைக்காமல்
பின்பே உணர்ந்தேன்
தேடுவதால் எதுவும் கிடைப்பதில்லையென்று....
சூழ்நிலைக்கு பழக்கிக்கொள்கிறேன் இப்போதெல்லாம்...
கிடைப்பதை ஏற்கிறேன்
வாழ்கிறேன்
எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல்
ஏனெனில்
எதிர்ப்பார்ப்புகளால்
நான் மீண்டும் ஏமாற்றப்படலாம்!!!