அக நட்பு

மண்ணுக்கு மரம் நட்பு
மரத்திற்கு நிழல் நட்பு
நிழலிற்கு நாம் நட்பு
நிதர்சனமாய் வேர் அதுவே
அகமாக நேர் நட்பு

தேனோடு மலர் நட்பு
மலரோடு மலர் நட்பு
மாலையாகி மணம் பரப்ப
மகரந்தம் நிகர் நின்று
அகமாகி ஆட்கொள்ளும்

அலையோடு நுரை நட்பு
நுரையோடு கரை நடப்பு
கரையோடு கடல் நட்பு
கடலோடு உவர் நட்பு
உவரோடு மணல் நட்பு
மணலோடு புனல் சேரும்
மகத்தான நிலம் தானே
அகத்தாலே மிக நட்பு

உயிருக்கு மெய் நட்பு
மெய்யிற்கு ஒலி நட்பு
உயிரிற்கும் மெய்யிற்கும்
உணர்வாக சொல் நட்பு
சொல்லோடு சொல்லாக
மொழியாகி தான் நிற்க
தமிழான அகம் தானே
முழுதாக முக நட்பு .

எழுதியவர் : நிரோஷனி றமணன் (18-Sep-21, 9:14 pm)
சேர்த்தது : நிரோஷனி றமணன்
Tanglish : aga natpu
பார்வை : 192

மேலே