காலை எனும் தலை
அதிகாலைப் புதையல்
இயல்பான மகிழ்ச்சி
அதிகார வாழ்க்கை
அடிவாங்கும் நிகழ்ச்சி
பழிபாவம் எல்லாம்
பின்வாங்கும் இங்கே
எதிர்காலம் நிகழ்காலம்
முத்தமிடும் இங்கே
பேதமெனும் பொய்யை
கேலி செய்யும் காலை
நாளின் பொழுது பாரு
அதிகம் பெற்றதாரு?
நேர்முகச் சிந்தனை
நேரிலே கண்டெடுக்க
காலையை கைகுலுக்கு
நாளெல்லாம் நேராக்கு
உடலென்ன மனமென்ன
ஒன்றாக உயர்வாக்கும்
அதிகாலைச் செயலியை
அன்றாடம் பதிவிறக்கு
தனிமைக்கிரீடம் சூடி
சன்னல் சபை திறந்து
பெரிய உண்மை பார்த்து
அண்ட அரசு நடத்து!