சுரங்க தொழிலாளர் நிலைமைகள்
சுரங்க தொழிலாளர் நிலைமைகள்
பக்கம் 1
பாட்டாளின் மக்களின் நிலைமை
பார்த்து பழகிய ஏழ்மையின் துயரங்கள்
பாட்டாளிகளின் படும் வேதனை
பார்த்து தெரிந்த நாங்கள்
பட்டியல்யிட்டு பார்க்க, திரும்பி
பார்க்க முடியாத நிகழ்வுகள்.
தங்கசுரங்கம் தரணில் தலைசிறந்த மாயம்
தங்கம் வெட்டி தந்த உழைப்பின் வர்க்கம்
தன் உயிரை பணையம் வைத்து-
தங்கத்தின் உலோகம் வியர்வையாய்
தரணியில் குவிந்து கிடக்கின்றது..
தங்க சுரங்கம் தரணியின் ஆழமான சுரங்கம்
உள்ளே சென்றால் பிணம் எனபர்
வெளியில் வந்தால் பணம் என்பர்-சுரங்கத்தில்
வாய்வுக்கள் நுரையீரல் பாதிக்கும் என்பர்
பலர் காசநோயில் பாதிப்பர் சிலர் சர்மநோயால் பாதிப்பர்
இத்தனையும் அபாயங்கள் கண்டு -பாட்டாளிகள்
அஞ்சாமல் உழைத்தார் மக்களின் பிழைப்புகாக்க
எத்தனையே துயரங்கள் மணிக்கணக்காக
தளராமல் உழைத்த மாந்தர்கள். உழைத்த
உழைப்புவிற்கு ஊத்தியமில்லை
உயிர்க்கு உத்தரவதும் இல்லை ஊக்கத்தால்
உயர்ந்தமக்கள் உரிமைக்காக குரல் கொடுத்து
உயிர் நீத்தார் எத்தனையே !இம்மண்ணியில்!
சுரங்கத்தில் பலர் கேஜியில் மாட்டி மடிந்தார்
சுரங்கத்தில் சிலர் மண்ணில் புதைந்து மடிந்தார்
சுரங்கத்தில் பலர் சுரங்கப்பறையில் இறப்பர்
சுரங்கத்தில் மின்சாரத்தில் உயிரை இழப்பர்
எங்கும் அழகையும் அலறலும் குரல்கள்
எட்டுத் திசையிலும் ஒலிக்கும். இம்மண்ணிலே
பாட்டாளியின் வர்க்கத்தின் காத்திட
செம்மையான தலைவர்கள்
நீண்ட நாட்களும் வேலைநிறத்தும்
நிரந்திர தீர்வு கண்டது.