எண்சீர் விருத்தம்
உழைப்பால் உலகம் சிறக்க கண்டேன்
உழைக்கும் மக்கள் பொருமை கண்டேன்
இழையோ டின்பம் இருக்க கண்டேன்
விழையும் உலகம் உணர்வைக் கண்டேன்
மழையும் பெய்வதால் வளமும் பெருகி
உழைப்போர் உலகம் உய்யக் கண்டேன்
பிழைப்பு சிறந்து பிணைப்பும் வளர்ந்து
அழைப்பின் களிப்பில் அறிகை அறிந்தேன்
உழவும் தொழிலும் உயர்ந்து நிற்க
உண்ண உணவு உடுத்த ஆடை
உலகம் மலை போல் குவிந்து
வணிகர் கூட்டம் வாழ்ந்து நிற்க
மணிகள் யாவும் தனியுடைமை யாகி
ஏற்றம் தழுவும் எளிதில் வளர்ந்து
மாற்றம் கண்டு வறுமை தழைத்து
இன்பம் துன்பம் இருந்து உயர்ந்து
உழைவு பொய்த்தால் உயிர்கள் இல்லை
உழவர் வாழ்வில் துன்பம் பெருகும்