இன்னொரு சாவு

அவள் மனதில்
என் நினைவுகள்
எப்போதும்...

என் மேல்
மாறவே மாறாத
காதல்..

அவள்
அம்மாவின்
வற்புறுத்தல் பயமுறுத்தலுக்காக
வேறு திருமணம்...

அவள்
குழந்தைக்கு
என் பெயர்...

என் சாவுக்கு பின்
இப்படி
நடக்குமானால்,

இன்னொரு முறை கூட
சாவு வேண்டும்
எனக்கு...✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (21-Sep-21, 11:00 am)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : innoru saavu
பார்வை : 41

மேலே