தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து – நல்வழி 32

நேரிசை வெண்பா

ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32

- நல்வழி

பொருளுரை:

பெரிய பூமியுலுள்ளவர்களே! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மேடும் பள்ளமும் போல செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்;

ஆதலினால், இரப்பவருக்கு உண்ண அன்னத்தை இடுங்கள்; பருகுதற்கு நல்ல தண்ணீரையும் வாருங்கள்; இப்படிச் செய்து வருவீர்களானால் இந்தத் தருமமே துணையாக உள்ளத்திலே தூயதன்மை ஓங்கி விளங்கும்.

கருத்து:

நிலையில்லாத செல்வம் உள்ள பொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித்தால் மனம் தூய்மையுற்று விளங்கும்.

விளக்கம்:

ஆறு வரும் வழியில் உண்டாக்கும் மேடும் பள்ளம் போல, நம்முடைய செல்வம் ஒருநாள் அதிகமாகும் அல்லது குறையும்.

பூமியில் வாழும் மனிதர்களே! இதை உணர்ந்து உங்களிடம் செல்வம் இருக்கும் போதே பசி என்று வந்தவருக்கு அன்னம் இடுங்கள், தாகம் என்று வந்தவருக்கு தண்ணீர் கொடுங்கள்,

நீங்கள் செய்த தர்மம் உங்களின் தலை காக்கும், அதுவே உங்கள் உயிர் உயரும் உபாயம் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-21, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே