இங்கும் அங்கும்
அங்கிருக்கும் உன்னை
கண்கள் காணத் தேவை இல்லை
இங்கிருக்கும் இதயத்தால்
அங்கு உன்னை உணர்வதால்...
மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்
மனதோடு அருகில் நீ
மண்ணிலே கால் பதிக்கத் தேவை இல்லை
மனதிலே பதித்ததினால்...
இங்கும் அங்கும் நடப்பதெல்லாம்
தனித்தனியே ஆனாலும்
நட்பிலே நடந்து வந்ததால்
சேர்ந்து நடப்பது போல் ஒரு பிரம்மை...
பால் ஒரு பொருட்டில்லை
பொருளும் ஒரு பொருட்டில்லை
வயதும் ஒரு பொருட்டில்லை
நட்பிற்கு ஒரு வரம்பில்லை...
ஜாதி தாண்டி மதம் தாண்டி
மனிதத்தை மட்டுமே நம்பும்
நட்பிற்கு கரம் நீட்டி
இதயத்தில் இடம் கொடுப்போம்...