தகப்பனே ஆசிரியனாய் - குறளடி வஞ்சிப்பா

தகப்பனவனே ஆசிரியனாய்
உகந்தபற்பல கலைகளையுமே தகுந்ததானதின் நேரவகையிலே
மிகுந்தவாஞ்சையில் தமதுபயிராம்
மக்களுக்கென வழங்கவகைகள்
பலவற்றையும் செய்தானெனில்
உலகிலே
நனிமிகு பிதாவென அனைவரும் தொழுதிட
தனிவொரு மனிதனாய் மிடுக்கென உயர்ந்தே.
---- நன்னாடன்.

குறிப்பு :
--------------
1. குறைந்தபட்சம் மூன்று வஞ்சி அடிகள் வருதல் வேண்டும் .
2. வஞ்சி அடிகள் குறளடிகளாலோ சிந்தடிகளாலோ அமைதல் வேண்டும் .
3. வஞ்சி அடிகளில் கனிச்சீர்கள் நிறைந்து வருதல் வேண்டும் .
4. வஞ்சி அடிகளில் வஞ்சித்தளைகள் நிறைந்து வருதல் வேண்டும்.
5. வஞ்சி அடிகளை அடுத்து தனிச்சொல் வருதல் வேண்டும் .
6. தனிச்சொல்லை அடுத்து சுரிதகம் வருதல் வேண்டும் (குறைந்த பட்சம் 2 அடிகள்)
7. சுரிதகம் ஆசிரிய ஓசையை கொண்டிருத்தல் வேண்டும்.

எழுதியவர் : நன்னாடன் (28-Sep-21, 10:38 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 18

மேலே