ஒடுங்கி தான் தீரும்
ஒடுங்கி தான் தீரும்.
அழகு நிறம் இளமை உள்ளது என்று
ஆணவத்தில் குதிக்கக் கூடாது அதோ
முதுமை வந்து கொண்டிருக்கிறது.
சொத்து சுகம் பணம் புதிதாக வந்ததை
வைத்து ஆடக்கூடாது அது வந்த
வழியை நீங்கள் மறந்தாலும்
உங்கள் மனம் உண்மையை
சொல்லிக் கொண்டுதான் இருக்கும்.
ஆடும் ஆட்டமும் ஒரு நாள் கண்டிப்பாக
ஒடுங்கி தான் தீரும்.