அஞ்சலி தினம்

அஞ்ச(லி)ல் தினம்
********************

அநேகமாக
சாத்தியமில்லை
எனினும்,

"மற்றவை நேரில்..."

இந்த வரிகளை
படித்து
வெகு நாட்களாகி விட்டன.

ஏனோ
அலைபேசிகள்,
காத்திருப்பின்
சுவாரஸ்யத்திற்கு
அஞ்சலி
செலுத்தி விட்டன.

நேசிப்போ,
வெறுப்போ....
நமக்கான
வரிகளை படிப்பதில்
அத்தனை சுவாரஸ்யம்...

கடிதங்கள்
என்பவை
அன்பின்
தூரங்கள்...
(அல்லது)
துயரங்கள்....

உலக அஞ்சல் தினம்.
அல்லது
அஞ்சல் அஞ்சலி தினம்
வாழ்த்துக்கள்....

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (9-Oct-21, 12:24 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : anjali thinam
பார்வை : 44

மேலே