நிலவுடன் நீ வா

நிலவுடன் நீ வா.

இரவே நீ வா!
இனிமை தரும்
இரவே நீ வா.

நிலவுடன் நீ வா!
காதலியின் அழகை
நான் பார்ப்பதற்கு.

தென்றலையும்
அழைத்து வா,
காதலியின் உடலை
நான் வருடுவதற்கு.

வந்த நீ,
சற்று எட்டியே
நின்று கொள்.

நாம் பேசுவதை
கேளாதே,
நம் உறவை
பாராதே,
யாரிடமும்
சொல்லாதே,
மறுபடியும் மறுபடியும்
வந்துவிடு!
வரும்போது நீ
நிலவுடன் வந்துவிடு.

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (10-Oct-21, 5:52 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 119

மேலே