உணவு ஒரு பொக்கிஷம் இல்லாதவற்கு

வாணியின் வயிறு வலித்தது. பசி தான் வாழ்க்கையின் கொடூரத்தின் உச்சம் என்று அந்த பெண்ணுக்கு தெரிய வில்லை பாவம் . அம்மா தான் இரவு ஏழு மணிக்கே உறக்கச்சொன்னால் பசிக்காதாம் ஆனால் வயிறு வலிப்பதால் தூக்கம் வரவில்லை. அம்மாவோ நன்றாக உறங்கிக்கொண்டிருந்தால் அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது நாமாவது பிஸ்கட் சாப்பிட்டோம் ஆனால் அம்மா எதுவுமே சாப்பிடாமல் எப்படி தூக்கம் வருகிறது என்று யோசித்தவாறு ஜன்னல் அருகே சென்றால் .

ஒரு குடும்பம் காரில் வந்து இறங்கி பாணி பூரி கடையின் முன் நின்றது , அந்த சின்ன பெண் பாணி பூரி கேட்டு வாங்கிச்சாப்பிட்டால் கொஞ்ச நேரத்தில் ஐஸ் கிரீம் வண்டி சத்தம் கேட்டதும் அந்த பாணி பூரியை தூக்கி போட்டு விட்டு ஐஸ் கிரீம் வேண்டும் என்று அழுது அடம்பிடிக்க அந்த குடும்பம் ஐஸ் கிரீம் வண்டியை நோக்கிச்சென்றது.

வாணியின் பார்வை அந்த பெண் தூக்கிப்போட்ட பானிபூரியை பார்த்து பல் இழித்தது. அதை பின்னால் இருத்து பார்த்து கொண்டிருந்த அவள் அம்மா அவளை கட்டி அணைத்தபடி சொன்னால் "அம்மா நாளைக்கு உனக்கு பாணி பூரி வாங்கி தரேன் மா"
அந்த தாயின் மனம் வேண்டியது " கடவுளே ! எச்சை சோற்றுக்கு அலையும் நிலை என் பெண்ணிற்கு தந்து விடாதே என்று வேண்டி கொண்டால் அந்த ஏழைத்தாய்.

உங்கள் பிள்ளைகளுக்கு உணவை வீணடிக்க வேண்டாம் என்று சொல்லிக்கொடுங்கள்
உணவு உபசரிக்க மட்டுமே முடித்தால் கொடுத்து உதவுங்கள்!

எழுதியவர் : நந்தினி ராஜகோபால் (17-Oct-21, 2:41 pm)
சேர்த்தது : Nandhini R
பார்வை : 165

மேலே