அகத்திமர வேர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நல்லகத்தி வேரதனை நாடுங்கால் மேகமெனுஞ்
சொல்லகலுந் தாகமறும் தோகையே - மெல்லமெல்ல
மெய்யெரிவு கையெரிவு மேகனத்தி னுள்ளெரிவும்
ஐயெரிவும் போமென் றறி

- பதார்த்த குண சிந்தாமணி

மேகம், அதிதாகம், உடல், உள்ளங்கை, ஆண்குறி ஆகியவற்றில் ஏற்படும் எரிவு இவை நீக்கும் பண்பு அகத்திமர வேருக்குண்டு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-21, 9:32 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே