இரவு நேரம்
துணையாக இருக்காதோ தூரத்து மின்விளக்கு
தூங்கத்தான் முடியவில்லை தூவானம் அழைக்கையிலே
துள்ளுகின்ற வெண்ணிலவை துரத்தித்தான் பார்க்கையிலே
தூரமோ அறியாமல் துயில்கொள்ள முடியவில்லை
பகல்நிலவு நீ வந்தால் பனி கூட துயில்கொள்ளும்
பனிக்காற்று விழும்நேரம் பாறைக்கும் குளிரெடுக்கும்
பால் நிலவில் கோலமிட பட்டிமன்றம் வேண்டாமே
பருவமொன்று வந்தாலே பைங்கிளிகள் கூடிவிடும்