கதவு 💨

நிறையப் பேசி
நிதானமாய் விழுந்தேன்...
கடைசியில் நீயுமா.... என்று
கோபப்பட்டாள்...

ஒரு கன்னத்தைக் காட்டினேன்.
கோபம் தீர அறைந்தாள்.
மறு கன்னத்தையும் காட்டினேன்;
நடந்தது,
இக் கவிதையின்
இறுதி பாரா....

எந்தக் கதவு,
எப்போது திறக்கும்
என்று
எவராலும்
சொல்ல முடிவதேயில்லை.

எதிர்பாராததெல்லாம்,
எதிர்பாராத
இடங்களில்தான் நடக்கும்...!
அதுவும்
எதிர்பாராத நேரங்களில்தான் நடக்கும்...!.

ஏனெனில்,
ஒரு கன்னத்தில்
அறைந்தவள்,

மறுகன்னத்தை
காட்டியபோது
முத்தமிட்டாள்....!!

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (18-Oct-21, 5:34 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 79

மேலே