🤗அன்பு😍
என் உள்ளத்தின் நோவால் அழுதாலும்
யாக்கையின் காயத்தை காட்டாமல் இருந்தாலும்
என் வதனத்தில் சினத்தை மறைத்தாலும்
எப்போதும் என்மீது அன்பை காட்டுபவள்
என்றும் என்னுடைய தாயாரே........
உதவி என்று அவனிடம் கேட்டாலும்
தமையனாய் என்னுடன் இருந்தாலும்
என் குதூகலத்தையும் இடரையும் பகிர்ந்தாலும்
எப்போதும் என்மீது அன்பு காட்டுபவன்
என்றும் என்னுடைய சிநேகிதன் அவன்.....
பலவித சண்டைகள் போட்டாலும்
பலவித விருப்பத்துடன் கொஞ்சினாலும்
சில விடயங்களை புரியாமல் நடந்தாலும்
எப்போதும் என்மீது அன்பு காட்டுபவன்
என்றும் என்னுடைய அன்புக்குரியவன் அவன்.......
நெஞ்சத்தில் திடத்துடன் இருந்தாலும்
ஊமையாய் வெளியில் நடித்தாலும்
உண்மையை உணர்த்தாமல் நகைத்தாலும்
எப்போதும் என்மீது அன்பு காட்டுபவர்
என்றும் என்னுடைய தந்தையாரே.........
இதைப்போல
மரத்தின் காயாய் இருந்தவளை
கனியாய் மாற்றி சுவைத்தானே
அன்பின் மரமாய் வளர்த்து
ஆணிவேராய் உயிரை காத்தானே
எப்போதும் என்மீது அன்பு காட்டுபவன்
என்றும் என்னுடைய கணவன் அவனே.........