அன்பின் ஆழம் காமம்

அன்பின் ஆழம்
தெரியாமல்
புதுபிரவாகம்
கரை தேடுவதிலே
நேரம் கடந்தது
முதல்முறை
என்பதால்...

"அன்பிற்கும்
உண்டோ
அடைக்குந்தாழ்"
வள்ளுவனின்
வார்த்தை
மெய்யானது
மெய்சிலிர்த்தது...

தொடமலே
சிறிதாக்கப்பட்ட
நேர் கோட்டில்
புதையல் தேடியே
புதைந்து
போகின்றன
புதிய இரவுகள்...

வார்த்தைகள்
யாவும் அமைதி
பள்ளத்தாக்கில்
எதிரொலிக்கும்
சிணுங்கல்களாக
வியப்பில் ஆழ்த்த
நிகழ்வது அதிசயம்...

இதுவும்
உள்ளங்கையில்
அடங்கிடும்
இதயம் போலவே
துடிப்பில் இசை
மீட்டிடும் மகரந்த
பூக்களே...

எழுதியவர் : மேகலை (19-Oct-21, 11:13 am)
சேர்த்தது : மேகலை
Tanglish : anbin aazham kamam
பார்வை : 272

மேலே