உலகம்
உலகம்.
சுற்றுது சுற்றுது
உலகம்,
சுற்றுது சுற்றுது
ஒளியைச் சுற்றி.
சுற்றுது சுற்றுது
தன்னைத் தானே,
தலை சுற்றி
விழாமலே!
நாங்களும்
சுற்றுகிறோம்
கூடவே சேர்ந்து,
சுற்றியே விழுகிறோம்
அதன் மடியில்.
விழுந்தவர் சிலர்
புதைகிறோம்,
மற்றவர் எல்லாம்
எரிகிறோம்,
இறுதியில் உயிர்
எங்கு?
இறைவனுடன்!
ஆக்கம்
சண்டியூர் பாலன்.