நம்பினார் கெடுவ
நம்பினார் கெடு......?
ஊரே ஒன்று கூடி,
உயிரைப் பிடித்து
ஓடும்போது!
அதோ! அங்கொருவன்,
அசையாமல்!!
அரைப்பயித்தியமோ?
காற்றும் வெள்ளமும்
சினம் கொண்டு
இருக்கையில்,
இவன் ஒருவன்
சிரிப்போடு
இருக்கிறானே!
கிறுக்கனோ?
பயித்தியமும்
இல்லை,
கிறுக்கனும்
இல்லை,
"ஆண்டவன் கையில்
தன் வாழ்வு,
நம்பினார்
கெடுவதில்லை" என
உட்கார்ந்திட்டான்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.