இதில் யாரை நம்புவது
யாரை நம்புவது?
கணவன்:
மலர் என்பதா!
"அவளை"
மரணம் என்பதா!
மலராய் இருந்தால்!
" நானும்"
மனிதனாக வாழ்ந்து,
மனைவியாக அவளை
மாற்றி இருப்பேன்.
மரணம் என்றதால்,
நான் மரணித்து
பலகாலம்,
மற்றவர்க்கு மட்டும்
கணவன் மனைவி.
மனைவி:.
மனிதன் என்பதா!
"அவனை"
மிருகம் என்பதா!
மனிதனாய் இருந்தால்!
"நானும்"
சக்தியாக மாறி,
அவன் வாழ்வை
இயக்கி இருப்பேன்.
மிருகம் என்றதால்,
நான் மரணித்து
பலகாலம்,
மற்றவர்க்கு மட்டும்
மனைவி கணவன்.
ஆக்கம்,
சண்டியூர் பாலன்.