தீபாவளிஅன்று எந்தாய் எனக்களித்த பதில் இன்றும் என்நினைவில்

வித விதமான பட்சணங்கள்
அதில் பல இனிப்பு சுவையில்
அதிரசமாய், அல்வாவாய் மைசூர்பாகு
திரட்டுப்பால், ஜிலேபி, ஜாங்கிரி என்றும்
மற்றும் பல பல காரங்களாக தேன்குழல்
கைமுறுக்கு , ஓமப்புடி என்றும்
என் அம்மாவும் தமக்கையரும் இரண்டு
நாட்களாக சமையலறையை கதி என்று இருந்து
செய்து முடித்தார்கள்......
இத்தனையும் பார்த்து ரசித்து மூக்கில் வியர்த்து நான்
அம்மாவைக் கேட்டேன்' அம்மா , மூக்குத்துளைக்கும்
இந்த பட்சணங்களைக் கொஞ்சம் ருசித்திட
தருவாயா ; என்று.....அதற்கே அம்மா
' என் செல்லமே அப்படி எல்லாம் இப்போ கேட்கலாகாது
இவை எல்லாம் நாளை உதயம்
'கங்கை ஸ்நானம்' ஆனா பிறகு
உன் அப்பா 'கண்ணனுக்கு' இப்பழகரங்களைப்
படைப்பார், பூஜை செய்து..... அப்போது
நம் கண்ணபிரான் அதை விரும்பி ஏற்று
அதில் சுவை சேர்ப்பார் .....அதன் பின்னே
நீயும் உன் தமக்கையும் வேண்டியதை
எடுத்து இனிதே சுவைத்திடலாம் அதுவரைப்
பொறுத்திரு..... இவற்றை முகராவும் செய்யாதே
என்று சிறு கோபித்து துரத்த.....


அடுத்த நாள் இளங் காளை பொழுதில்
வாசலில் 'பூம்பூருக்கு காரன்' நெய்யாண்டி
நாதஸ்வரம் வாசிக்க.... அம்மா எங்களுக்கு
தலையில் 'இணைவைத்து. இளம் சூடு நீரில்
குளிக்க வைத்தாள்..... பின் புத்தாடை
உடுக்க வைத்தாள்.... நெற்றியில் போட்டு வைத்து
வீட்டு பூஜை அறையில் 'கண்ணன்முன்; நிற்க
வைத்தாள்.... பின் ' தீயவை எல்லாம் உன்னால்
நரகன் வீழ்ந்து போல் அழிந்திட .... எல்லாரும்
எல்லாம் பெற்று னாய் இலா வாழ்வு வாழ்ந்து
உன்பெயர் ஏற்று உன்னடி நாடி உன்னில்
சேர்ந்திட வாழ்வின் முடிவில் வலி வகுத்திடுவாயா
கண்ணா என்று துதிப் பாடி ...பின்
கற்பூர ஆரத்தி எடுத்து பூஜையை தந்தை முடிக்க

என் வாயில் அம்மா கொஞ்சம் 'திரட்டிப் பால்.
தந்தாள்... பின்னே கொஞ்சம் 'சுக்கு லேகியமும்
தந்தாள்..... ஏன் இது என்று நான் கேட்க....
இனி எனக்கு தெரிந்தும் தெரியாமலும் நீ
சாப்பிடப் போகும் தின்பண்டங்கள் ஜீரணிக்க
என்றாள்......

அப்போது அன்று எழுபது அறுபது வருடங்களுக்குமுன்
நடந்த எங்கள் வீட்டு தீபாவளியி நாளில்
நான் ஏன் அம்மாவைக் கேட்டேன்..' அம்மா
தின் பண்டங்கள் எல்லாம் செய்து அதை
ருசியும் பார்க்காது .....உப்பு அதிகமா, காரமா
இல்லை சீனிதானோ என்றெல்லாம் பார்க்காது
என்னையும் பார்க்கவிடாது .....
'தீபாவளி' காலையில் பூஜையில் நிவேதனம்
செய்தபின்னே எமக்கு அளித்தாய்....
நீ படைத்த இனிப்பு காரங்கள் அப்படியே இருக்க
நம் கடவுள் கண்ணன் அதை ஏற்றுக்கொண்டான் என்கிறாயே
எப்படி என்று நான் கேட்டது இன்னும் ஏன் நினைவில்,,,,,,
அதற்கு அம்மா சொன்னாள், ; செல்லமே
கண்ணன் ஏற்பது கண்ணனுக்கு தெரியாது
நம்கண்ணிற்கு தெரியாமல் இருக்கும்
அவன் போல ஆயின் நீ சுவைத்து
'அம்மா நீ செய்த அத்தனையும் அறுசுவையே
என்கிறாயே..... அந்த சுவை அத்தனையும்
தந்தது 'கண்ணன்தான் ' என்றே புரிந்துகொள்
என்றாள்ள்.........................


நாளை வரப்போகும் 'தீபாவளியில்' ஒருகால்
எண்பேரானோ , பேத்தியோ இப்படி ஒரு கேள்விக்கு கேட்டால்
என்பதில்....அன்று எனக்கு ஏன் அன்னை
அளித்த பதில் தான் .....இருக்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (24-Oct-21, 3:49 pm)
பார்வை : 44

மேலே