அவள் ஓர பார்வை பேசும் ஓராயிரம் மொழி

முதல் பார்வையில் முழுதாய் கவிழ்ந்தேன் நான் ...ஆனால் பாராதது போல பாவனை கொண்டாள் ...பால் நிலா

மறைந்திருந்து பார்க்கையில் ...மனம் தவித்தாள் ...யெனை காண...
பிறிதொரு நாள் பின்தொடர ...பதறி
தவித்தது பளிங்குச்சிலை...

அடிக்கடி அடிக்கடி கண்ணில் பட்டேன் விழியில் அன்பு காட்டியது ஆனந்த பூ
வழிக்கு வந்தது யென எண்ணி
விழியசைவில் தூது விட்டேன் ...காணாமல் போனது பைங்கிளி

யதோச்சையாக சந்தித்தபோது ஏக்கம் கொண்டு யெனை ஏறிட்டாள்..
புரியாமல் தவித்தேன் ...
புன்னகையாய் பூத்தது முல்லைப்பூ..

விருப்பம் தெரிவிக்க விரைந்தேன்
வந்தச்சுவடு தெரியாமல் விலகியது
சூரியனைக் கண்ட பனித்துளி...
வாட்டம் வந்தெனை வாட்ட..

நாட்டம் கொண்டது துயி்ல் காணா யென்மனம் ...அவள் தந்த
ஓர் ஓர பார்வையை ஓராயிரம் முறை எண்ணி...

கன்னி வைத்த கண்ணி
வலையில் மீள வழி இன்றி...தவிக்கிறேன்

மீண்டவர் உண்டெனில் நல்வழி தருக...அவளின் ஓர பார்வைக்கு ஓராயிரம் மொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளராக....

எழுதியவர் : பாளை பாண்டி (25-Oct-21, 6:41 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 261

மேலே