இயற்கை

"உயர்ந்த மலை சிகரத்திலே பனியின் மூட்டம்,
அதில் தவழ்ந்து வரும் நதியினிலோ அலைகளின் ஓட்டம்,

பசுமையான வயல் வெளித்தனிலே நெற்பயிர் கூட்டம் ,
தேன் சொரியும் மலர் வனமதிலோ வண்டுகளின் நோட்டம்,

ஆகா! இதுவன்றோ இயற்கை அன்னையின் எழில்மிகு தோற்றம் !மனித வாழ்விற்கு தேவையான ஊட்டம்,

ஆயினும் அவள் முகத்தில் இன்று ஒரு மாற்றம் ,
அதில் தெரியும் லேசான வாட்டம்,
ஏன் ?

இயற்கையை அழிக்க மனித இனம் போடும் ஆட்டம் ,
ஒரு பயனற்ற வெறியாட்டம் !
அதனால் நமக்குத்தான்
வீண் நட்டம் ?

இனியாவது வர வேண்டும்
ஒரு சட்டம்,
அமைய வேண்டும் நல்லதொரு
திட்டம்,
இயற்கையை காக்க மட்டும்."

எழுதியவர் : (27-Oct-21, 10:51 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : iyarkai
பார்வை : 431

மேலே