மாலை சூட வா - பாகம் இரண்டு

சூட்டிய மாலையின் வாசம் என்னுள்
சொர்க்கத்தின் வாசலில் சோலையின் மத்தியில் வீற்றிருக்கும் உணர்வையே தருகிறது.
உற்றாரும் உறவினரும் நம் பொருத்தம் கண்டு சற்றே பெருமூச்சு விடுவதும் என் கண்முன்னே தெரிகிறது.
உன் அருகில் உன் கரம் பிடித்து என் கண்ணில் கசிந்த நீர் நீ துடைத்து
நம் திருமண நிகழ்வின் தித்திக்கும் தருணத்தை இருவரும் ரசித்து
இனி வரும் காலம் உனக்காகவே நான் இருப்பேன் என்று நினைத்து
உன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து உன் கண் அசைவிலே இனி வரும் நாட்கள் நான் கழிக்கபோகும் நேரத்தை நினைத்து சூடிய மாலையின் வாசத்தில் நான் சொக்கியே நிற்கின்றேன்...

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (27-Oct-21, 1:33 pm)
சேர்த்தது : நா சந்தன கிருஷ்ணா
பார்வை : 56

மேலே