இது கதை கட்டுக்கதை விடுகதை கவிதை

ஒரு கட்டுரை எழுதத்தான் விழைந்தேன், ஆனால் ஏனோ இயலவில்லை
கட்டுரை இல்லையேல் கவிதை ஒன்றை எழுதாமலிருக்கமுடியவில்லை
இப்போதுதான் சிந்திக்கிறேன் என்ன கவிதையை எப்படி எழுதலாம் என்று
படிப்பவர் அனைவரையும் திருப்தி படுத்தவேண்டும் எனில் அது முடியாது
ஆனால் நான் எனக்கு எழுதி என்னை நிச்சயம் திருப்தி படவைக்க முடியும்

இயற்கையையும் அதன் அளவிலா அழகையும் என்னால் உணரமுடிகிறது
மரம் செடி கொடிகளின் இயற்கையான இனிய நடனத்தை ரசிக்கமுடிகிறது
காற்றின் தன்மை, மென்மை மற்றும் அதன் வன்மையை அறிய முடிகிறது
பறவை பட்சிகள் சுதந்திரமாக சுகமாக பறப்பதை கண்டு களிக்க முடிகிறது

விலங்குகள் பசிக்கும் போது மட்டுமே உணவு தேடுகிறது, இதை அறிவேன்
ஐந்தறிவு வரை உள்ள ஜீவன்கள் இயற்கையுடன் மிக ஒன்றியே வாழ்கிறது
ஆறறிவு படைத்த, நன்கு படித்த குலம், மின்னலை போல் முன்னேறுகிறது
ஆனால், அய்யஹோ!மனிதனாக மட்டும் வாழ ஏனோ இப்படி மறக்கிறதே?

செயற்கை புரட்சிகளை தினமும் செய்து அற்புதங்கள் படைத்தது வருகிறது
கடவுளை போல் படைப்பு தொழிலிலும் இறங்கி சாதனை செய்து வருகிறது
அமர்ந்த இடத்திலிருந்து உலகை சுற்றிவர சொகுசுகள் செய்து கொடுக்கிறது
ஆனால் இயற்கை மடியில் பிறந்தும் இயற்கை வாழ்வை மறந்து விட்டதே!

சமுதாயத்தை உருவாக்கிய மனித குலம் நேயத்தை உருவாக்கவில்லையே
பிணிகளுக்கு மருந்து கண்ட இனம் அமைதிக்கு குணம் அளிக்கவில்லையே
பணத்தால் பசிதீர்த்து பல இன்பங்களை ருசிபார்க்க வைக்கும் இச்சமுதாயம்
குணத்தால்,பசியில் வாடும் கோடி ஏழைகளுக்கு உணவு தர முடியவில்லை

அண்ணன் தம்பி, அக்கா தங்கை, இவர்கள் உடன் பிறப்பது பாசத்திற்காகவா?
அல்லது வேண்டியதை வாங்கி தரும் செயற்கை அரக்கன் பணத்திற்காகவா?
நட்பு என்பது அனைத்து உறவுகளையம் தள்ளிவிட்டு உயிராக பழகுவதற்கா?
இல்லை, தேவை படும்போது மட்டுமே நண்பன் என்ற தன்னலத்திற்காகவா?

நல்ல தகவல்களை கற்பது எதற்கு? பிறருக்கு மட்டுமே சொல்வதற்காகவா?
இல்லையேல் அத்தகைய நல்வழிகளை வாழ்வில் கடைபிடிப்பதற்காகவா?
அழகுமட்டும் நிறைந்து ஒருவர் இருப்பின் மறந்து அதை ரசிப்பதென்னவோ
பண்பாடும் குணம் கொண்ட காசில்லா மனிதரை அசட்டை செய்வதேனோ?

சினிமா, தொல்லை காட்சி நாடகங்களுக்கு மட்டும் போதை கொள்வதேன்?
திறமை இருந்தும் பின்தங்கி இருப்பவர்களை அ(தட்டி),கொடுக்காதது ஏன்?
சினிமா,அரசியல்,விளையாட்டு விஷயங்களை முன்அனுப்ப ஆர்வம் ஏன்?
மனிதருக்கு நன்மை பயக்கும் விஷயங்களை உடனே டிலீட் செய்வது ஏன்?

அன்பு என்றால் என்ன? இதை அறியாமல் காமகாதலை அன்பென்பானேன்
தாழிடப்பட்ட சமுதாயம்( gated community) என்றால் பக்கத்து வீடு திறந்தால்
நம் வீட்டு கதவை இழுத்து மூடுவதென்ன,முகமும் காட்டாதிருப்பதென்ன
உடல்மன நலத்தை சிந்திக்காமல் செல்போனே கதியென்று வாழ்வது ஏன்?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (27-Oct-21, 12:04 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 57

மேலே