அடக்கும், ஒழிக்கும்

பல நூலு கயிறாகும்
பல கயிறு வடமாகும்
வடம் கொண்டு
வலிமை மிகு யானையை
கட்ட உதவும்
கட்டி அடக்க பயன்படும்

பல நூல்கள் இலக்கியமாகும்
பல இலக்கியங்களைக் கற்றவனை
அறிவு நிறை மேதையாக்கும்
அவன் கற்ற அறிவு
அறியாமையெனும் யானையை
அடக்கும், ஒழிக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (27-Oct-21, 12:23 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 17

மேலே