காதல்

காதலில்
கரைந்தவர்
பல கோடி
இமைக்கும்
இமைகளால் சிலர்
இழுக்கும்
பார்வையால் சிலர்
மயக்கும் மாய
புன்னகையால் சிலர்
இசையோசை குரலால் சிலர்
திங்கள்
முக ஒளியால் சிலர்
கார் நிற கூந்தலால் சிலர்
மலர் பாதம்
பதிந்த
சுவடுகளால் சிலர்
பருவ வனப்பால் சிலர்
ஆனால்
இவை அனைத்தும் இருந்தும்
கரைந்து போனேன்
கபடம் அற்ற
ஒருதுளி கண்ணீரால்

எழுதியவர் : ஞானிமணிபாபு (28-Oct-21, 3:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 237

மேலே