அறிவியலும் மாற்றமும்

ஒரு விகற்ப / பல விகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா

தலையில் முடியும் மலரின் எடையோ
விலையென இல்லையே ஆனால் மணமோ
மலையாய் மகிழ்வு தரும். --- (1)

மின்னாற் றலாலே சிறந்த முறையிலே
பன்துறை எங்குமே ஏற்றமும் ஆற்றலும்
நன்றாய் இனிமேல் நிறைந்து. --- (2)

இதுவரை ஏற்றமாய் நிற்கும் அறிவியல்
கற்றதால் ஓங்கி மிடுக்காய் உலகில்
முதலின தோற்றமும் பார்த்து --- (3)

குருதியும் விந்தும் கருப்பையும் எச்சிலும்
ஆக்க முடியமா இன்று அறிவியல்
ஆளுமை உள்ளோர் களால் --- (4)

இடப்பெயர் வுக்கென வந்தன பற்பல
எந்திர ஊர்திகள் எல்லாம் இயங்கிட
எண்ணெயை வைத்தவன் யார் --- (5)

மூளையும் வேளையும் ஒவ்வொரு பக்குவம்
மாற்றியே வைத்து செயல்பட செய்யுமோ
இன்றைய விஞ்ஞா னமும் --- (6)

பாலது வெள்ளையாய் பூமியில் எங்குமே
வெய்யிலும் வெம்மையாய் ஞாலமும் எங்கும்
அறிவியல் மாற்றிடு மோ --- (7)

பூமியை வெட்டி இரண்டாய் பிரித்திட
சாமியை மிஞ்சிடும் எண்ணம் அறிஞருள்
சோதித் திடவும் வழி --- (8)

உயிரென உள்ளது மெய்யுள் உலாவியே
எந்த உணர்வும் உரிமையும் இன்றியே
பற்ற அறிவியல் செய் --- (9)

அறிய அறிய அறிவியல் தோன்றும்
பெரிய பெரிய வழியும் அதனால்
புலப்படும் ஏற்றல் நலம் --- (10)
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (29-Oct-21, 7:14 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 54

மேலே