பற்றற்ற மன நிலையில்
குழந்தை ஒன்றை
தூக்கிக் கொண்டு
ஓடிவந்த ஒரு கூட்டம்
துறவியிடம் வந்து
தங்கள் கோபத்தைக் காட்டினார்கள்
துறவி “ என்ன விஷயமென்றார் “
இது உங்கள் குழந்தை,
நீங்கள் ஒரு பெண்ணை கெடுத்து
அவளுக்கு ஒரு குழந்தையும் கொடுத்து
அவளை ஏமாற்றி விட்டீர்களே
இது தர்மமா? நீங்கள் துறவியா ? என
ஆவேசமாகக் கத்தினார்கள்
துறவி ஏதும் கூறாமல்
‘குழந்தையை என்னிடம் தாருங்கள்,
குழந்தை என்னுடையதென்பதால்
காக்கும் பொறுப்பை நானே
ஏற்றுக் கொள்கிறேனென்றார்”
பதற்றமில்லாம குழந்தையை ஏற்றார்
கூட்டத்தினர் கலைந்தனர்,
கையில் ஏந்திய குழந்தை
பசியால் பாலுக்கு அழுதது
பச்சிளம் குழந்தைக்கு பாலூட்ட
வீடு, வீடாக சென்று துறவி, பால்
வேண்டி நின்றார்--நடத்தை
கெட்டவரென ஒருவரும் தரவில்லை
ஒரு வீட்டைத் தட்டும்போது
பெற்றவளே பாசத்தோடு ஓடிவந்து
குழந்தையை வாங்கியபடி
துறவியின் காலில் விழுந்து
தான்செய்த தவற்றுக்கும், பழி
சுமத்தியதற்கும் மன்னிப்பு கேட்டாள்
ஊரு சனம் துறவியிடம் கேட்டார்கள்
வீண் பழி சுமந்து குழந்தையை
நீங்கள் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?
துறவி சொன்னார் “பற்றற்ற மன நிலையில்
பற்ற வேண்டியதைப்
பற்றிக்கொள்வது தான் துறவு” என்றார்